பாப்பான்குளம் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் செல்லும் சாலையில் உள்ள் ஒரு ஊர். இங்கே ஒரு பழமையான சிவாலயம் உள்ளது. இச்சிவாலயத்தில் திருவெண்காடர் என்ற பெயரில் இறைவனும், வாடாகலைநாயகி என்ற் பெயரில் தேவியும் எழுந்தருளி உள்ளார்கள்.
இங்குள்ள சிவனையும் தேவியையும் பற்றி நான் எழுதிய வெண்பா:
போற்றி கடனா நதிபாயும் பேரணியில்
ஏற்றமிகு பாப்பான் குளந்தனிலே – வீற்றிருந்து
நாடாநின் றோர்க்கருளும் சீர்திருவெண் காடருடன்
வாடா கலைநா யகி.







இக்கோவிலின் சிறப்புகள்:
1) இக்கோவில் 500 வருடங்கள் பழமையானது ஆகும்.
2) மழை பெய்ய வேண்டி இங்குள்ள இறைவனுக்கு தாராஹோமம் செய்தால் உடனெ மழைவரும் என்று சொல்கிறார்கள்.
3) இந்தக் கோவிலின் லிங்கம் சந்திரகாந்தக் கல் (சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட்) என்னும் அபூர்வமான கல்லைக் கொண்டு செய்யப் பட்டது ஆகும்.
4)இங்குள்ள லிங்கம் கருவறைக்கு அருகில் இருந்து பார்த்தால் சிறியதாகவும், கொடிமரத்திற்கு அருகில் இருந்து பார்த்தால் பெரிதாகவும் தெரியும்.
திருக்கோவில் வரலாறு:
http://temple.dinamalar.com/New.php?id=1637
இந்த ஊரைப் பற்றி இதுவரை பலரால் எழுதப்பட்ட அத்தனைக் கட்டுரைகளையும் இங்கு பதிவிடுகிறேன்:
விரிசடை கடவுளான ஈசன், அபூர்வமாக சந்திரகாந்த லிங்கத் திருமேனியனா, ‘திருவெண்காடர்’ எனும் திருநாமம் கொண்டு திகழும் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சதுர்வேதி மங்கலம்.
‘வேதம் ஓதிக் கொண்டிருந்த துர்வாசர், ஒரு இடத்தில் ஸ்வரம் தவறுதலாகச் சொல்ல, சரஸ்வதி தேவி சிரித்து விட்டாள். இதனால் 64 வருடம் பூமியில் இருந்து, 64 கலைகளையும் மானிடர்க்குக் கற்றுக் கொடுக்கக் கடவது” எனச் சாபம் கொடுத்தார் துர்வாசர். அதன்படியே ராம நதி பாயும் இத்தலத்தில் திருவெண்காடரையும், வாடாகலை நாயகியையும் வழிபட்டனர் பிரம்மனும், சரஸ்வதியும்’ என்கிறது புராணம்.

பிராமணர்கள் வேதங்கள் ஓதி பூஜை செய்த இடமாதலால் ‘பார்ப்பான்குளம்’ என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘சதுர்வேதிமங்கலம்’ என்று மருவியது என்கிறார்கள். புதன் பகவான் வணங்கி பேறு பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலை பாண்டிய மன்னன் ஆதித்யவர்மன் நிர்மாணித்ததாக வரலாறு.
புதனுக்கு ‘கிரஹபீடாஹரன்’ என்று ஒரு பெயர் உண்டு. மற்ற கிரகங்களால் விளையும் அசுபலனைப் போக்கும் வல்லமை புதனுக்கு உண்டு. அந்த புதனே வழிபட்ட தலம் என்பதால் இந்த இறைவனை பூஜித்தால் எல்லா கிரக தோஷமும் நிவர்த்தியாகும், பூரணக் கல்வி கைகூடும்.

அன்னை வாடாகலை நாயகி, கலைகளின் தாயாக விளங்குவதால், இவளை வணங்க கலைகளில் சிறந்து விளங்கவும், சிறப்புடன் செயல்படவும் முடியும்.
கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்திலிருந்து வழிபடும்போது மூலவர் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று வழிபடும்போது பெரியதாகவும் தோன்றுகிறது. சுவாமி திருவெண்காடர் சந்திரகாந்த லிங்கத் திருமேனியனாக இருப்பதனால் இவருக்குச் செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது. ஒரு மண்டலம் இவரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தினைப் பருகிவர, அனைத்துவித நோய்களும் குணமாகிறது என்பது பக்தர்களின் அனுபவம்.

இக்கோயிலில், பிரதோஷம், சிவராத்திரி, சித்திரை 1 மற்றும் ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகம் போன்றவை விசேஷமானவை. உற்சவர் சுவே தாரண்யேசுவரர். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். தல விருட்சம்: பவளமல்லி (பாரி ஜாதம்).
இங்குள்ள குரு பகவான் காலடியில் நாக வடிவம் காணப்படுவதால், இவரை வணங்க இராகு, கேது தோஷம் நீங்குகிறது. இங்குள்ள சனி பகவானை வணங்க எதிரிகள் பயம் நீங்கும் என்றும் கூறுகிறார்கள்.
பழைமையான இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. பிறை சூடும் பெருமானின் ஆலயத் திருப்பணியில் பங்கேற்பது, நம் மரபுக்குச் சேர்க்கும் செல்வமன்றி வேறென்ன?
செல்லும் வழி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடையம் செல்லும் வழியில் 33 கி.மீ. அங்கிருந்து கோயில் செல்ல 1 கி.மீ.. ஆட்டோ வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 5 மணி முதல் 12 வரை. மாலை 4 மணிமுதல் 9 வரை.
தொடர்புக்கு: +91 9486396383 / 9486426872
2) பாப்பான்குளம் வாடாகலைநாயகி உடனுறை திருவெண்காடர் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் 1945 இல் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து, 2017 இல் சிவனடியார்கள், ஊர்ப் பொதுமக்கள், பக்தர்கள் இணை ந்து கும்பாபிஷேகம் நடத்தினர். – Dinamalar.
3) சிவபக்தரான பாண்டிய மன்னர் ஆதித்தவர்மன், பல சிவாலயங்களை கட்டி வந்தார். அவர் கட்டிய கோயில்களை சதுர்வேதி என்ற சிற்பி வடிவமைத்தார். கலை நுணுக்கத்துடன் சிலை வடித்து மன்னரின் மனதில் இடம் பிடித்தார். அவருக்கு மன்னர், நிலம் தானமாக வழங்கினார். அந்தப்பகுதி சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. சிலகாலம் கழித்து, சதுர்வேதிக்கு, வாழ்வில் பல இடையூறுகள் ஏற்பட்டன. ஜோதிடம் பார்த்த போது, கிரகதோஷமே துன்பத்திற்கு காரணம் என்றனர். இதற்குப் பரிகாரமாக சந்திரகாந்தக் கல்லில் சிவலிங்கம், பரிவார தெய்வங்கள், நவக்கிரகங்கள் வடித்து ஒரு கோயில் கட்டும்படி கூறினர். இதை மன்னரிடம் சதுர்வேதி தெரிவித்தார். அவரது துணையுடன் தனக்கு தானமாக தரப்பட்ட நிலத்தில், கோயில் கட்டி குளம் வெட்டினார். இந்தக் குளம் கல்குறிச்சி குளம் எனப்படுகிறது. இதன்பிறகு அவருக்கு கஷ்டம் குறைந்தது. சந்திரகாந்தக்கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை திருவெண்காடர் என்கின்றனர். அம்பாளின் திருநாமம் வாடாகலை நாயகி. தாமிரபரணியின் வளமையால் இப்பகுதியில் பலவித பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததால் இப்பகுதி முதலில் பாப்பாங்கு என்று பெயர் பெற்றது. பாப்பாங்கு என்றால் பறவைக்குஞ்சு. இப்பெயரே காலப்போக்கில் மருவி பாப்பான்குளம் ஆகிவிட்டது. – http://templeservices.in/temple/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/
4) தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தில் குண்டலினி சக்தியைக் குறிக்கும் நாகம் பெரும்பாலும் வரையப்பெற்றிருக்கும். ஆனால், இப்போது நாம் தரிசிக்கப் போகும் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் நாகம் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி, நாகம் தட்சிணாமூர்த்தியின் காலடியில் சிற்பமாக இருப்பது அரிதான ஒன்று!
பகைவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றப் போருக்குச் செல்லும் முன்னர், இங்கு வந்து திருவெண்காடரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் பாண்டியர்கள்.
ஆதித்யவர்மன் என்ற பாண்டிய மன்னனுக்கு நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து, இங்கு வந்து வழிபட்ட பின்னர் குழந்தைப்பேறு கிடைக்கப்பெற்றதால், இந்த ஆலயத்தை இன்னும் பெரிதாக விரிவுபடுத்தி, சதுர்வேதி என்ற சிற்பியைக் கொண்டு இங்குள்ள சிலைகளை நிர்மாணித்ததாகவும், அந்தச் சிற்பிக்கு ஓர் ஊரையே தானமாக அளித்ததாகவும், அந்த ஊர் அவர் பெயரிலேயே சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதையைத் தேடிக்கொண்டு ராமர் வந்தபோது, இங்குள்ள ஆற்றில் சந்தியாவந்தனம் செய்தாராம். ராமர் அமர்ந்த அந்தப் பாறை ‘சக்கரப் பாறை’ என்ற பெயரில் இன்றளவும் பூஜிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட புண்ணிய நதியான ராம நதியும், கடனா நதியும் சங்கமிக்கும் இடம் பாப்பான்குளம்.
உத்தரபுரி என்று திருவெண்காட்டையும், மத்தியபுரி என்று மதுரையையும், தட்சிணபுரி என்று பாப்பான்குளத்தையும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தக் கோயிலில் ஒரு சித்தரின் உருவமும் இருக்கிறது. அங்கு எப்போதும் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கும். – https://www.vikatan.com/spiritual/temples/94868-
5) 900 ஆண்டுகள் பழமை. குலசேகர மாறவர்மன் காலத்திய கற்றளி கோவில். மதுரை நாயக்கர்காலத்தில் திருப்பணி. – https://www.naavaapalanigotrust.com/index.php/tn-kovil-list/4238-pappaankulam-sivan
6) Agama or Puja of this temple is known as karanagama. – https://hindupad.com/thiruvenkadar-temple-pappankulam-tirunelveli/
7) பொதிகை மலையில் தவமியற்றிய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து ஒரு துளி நீர் சிந்திச் சிதறியது. அவரின் திருவருளால் அது ராம நதியாக உருவாகி, கடையம் வழியாகப் பாய்ந்து கடனாநதியோடு கலந்தது. இரு நதிகளும் சங்கமிக்கும் அந்த இடத்தில் ஒரு பாறை. இதில் ராமபிரான் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்தாராம். அதனால் இந்தப் பாறைக்கு “சந்தியாபாறை’ என்று பெயர் ஏற்பட்டது என்பர். இங்கே சங்கு சக்கர வடிவம் உள்ளதால் சக்கரப்பாறை என்றும் அழைப்பர். இந்த மகிமை பொருந்திய இடம்தான் பாப்பான்குளம்.
8) சம்பகாசுரனை அழிப்பதற்காக ராமன் இந்தத் தலத்தின் இறைவனை வணங்கினாராம். இந்த சந்தியா பாறையில் ராமபிரான் ஏறி நிற்க, அவர் முன் நேர்நிலையிலும் கீழ்த் திசையிலும் சிவ ஜோதி தோன்றி, சம்பகன் இருக்கும் இடத்தைக் காட்டியதாம். பாப்பான்குளம் திருவெண்காடரும், மடவார்விளாக திருக்கருத்தீசருமே இவ்வாறு ஜோதியாகத் தோன்றி ராமபிரானுக்கு வழிகாட்டினர் என்பர். அதனால், பாப்பான்குளம் திருவெண்காடரை ராமபிரான் வணங்கியதாக தலபுராணம் சொல்கிறது. பொதிகை மலைச் சாரல் தவழும் சிவசைலம் அருகிலுள்ள சம்பங்குளத்தில்தான் சம்பகவதம் நடந்ததாகச் சொல்வர். இதற்கு ஏற்ப, பாப்பான்குளம் சிவன் கோயில் அருகே பழநி ஆண்டவர் கோயிலும், அதன் எதிர்ப்புறம் ராமசாமி பெருமாள் கோயிலும் உள்ளன.
பார்ப்பு இனம் என்பது, பறவைகள், தவளை, ஆமைகளின் குஞ்சுகளை உணர்த்தும். இங்குள்ள குளத்தில் இவை ஒலி எழுப்பியதால், இவ்வூருக்கு பார்ப்பு ஆர் குளம் என்ற பெயர் ஏற்பட்டதாம். ஆர்-ஆர்த்தல்-கூடி ஒலித்தல் என்பது பொருள். இவ்வூர்க் கல்வெட்டில் -ராஜசதுர்வேதி மங்கலத்தின் வடமேற்கே வேளார்குறிச்சியில் பகவதி விண்ணகர் ஆழ்வார் – என்ற வாசகம் உள்ளது. அதன்படி, நான்கு வேதங்களும் அறிந்த அந்தணர்கள் வாழ்ந்ததால் பாப்பான்குளம் என்ற பெயர் வந்திருக்கலாம்.
பாண்டியன் ஆதித்தவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாப்பான்குளம் திருவெண்காடர் கோயில் இன்று சிதிலமடைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கிய இக்கோயிலில் வாடாகலைநாயகி அம்மை காட்சி தருகிறார். முப்பத்திரண்டு கலையம்சங்களுடன் கூடிய அம்பாள் திருவுருவைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சிற்பி ஒருவர், சங்கப் புலவர்கள் போல் தன் பெயரை உரைக்காமல் கல்குறிச்சி என்ற பெயருடனும் இவ்வூரில் வாழ்ந்து பல சிற்பங்கள் செய்தவர். அவர் பெயரால் இவ்வூரில் கல்லக்குறிச்சி குளமும் உள்ளது. திருவெண்
காடர் லிங்கமும், வாடாகலை நாயகி சிற்பமும் உயர் ரகக் கற்களால் இச்சிற்பி வடித்ததாகும். கோயிலின் உள்பிராகாரங்களில் உள்ள தூண்களில் சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
இங்குள்ள சனிஈஸ்வரரை சோழனின் படைத்தளபதி வழிபட்டு, சனி தோஷம் நீங்கப் பெற்றான். அதன் பிறகே அவனுக்கு, சேரனை வெல்வதற்கான பலம் கிடைத்தது என்பர். இவ்வகையில் எதிரிகளை வெற்றி கொள்ள இங்குள்ள சனி ஈஸ்வரரை வணங்குதல் நலம் பயக்கும்.
கருணை நதியும் (கடனா நதி) ராமநதியும் (வராக நதி) இவ்வூரில் சங்கமிக்கும் இடத்தை இரண்டாத்து முக்கு என்கிறார்கள். இதில், ஆனி, ஆடி மாத சனிக்கிழமைகளில் குளித்து திருவெண்காடரையும், வாடாகலை நாயகியையும் தரிசித்து, நல்லெண்ணெய் விளக்கேற்றினால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
கங்கையிலிருந்து அத்ரி முனிவர் கடனாகப் பெற்று உற்பத்தி செய்த ஆறு கடனா நதி. அகத்தியரின் கமண்டலத்திலிருந்து சிதறிய துளி ராமநதி. இந்த இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் தீர்த்தமாடுவதால் புண்ணியம் கிட்டும்
சோழ மன்னனுக்கு எதிரியை வெல்ல பலம் கொடுத்தது போலவும், ராமபிரானுக்கு சம்பகனை வதம் செய்ய அருளியது போலவும் நம் எதிரிகளை வெற்றிகொள்ள இக்கோயிலில் வழிபடலாம். – http://deivatamil.com/890-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f.html